தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திறந்த வெளியில் வெளியேற்றப்படும் கழிவுநீர் - எச்சரிக்கை விடுத்த துணை ஆட்சியர் - Open space

திருவள்ளூர்: பூந்தமல்லி பகுதியில் திறந்தவெளியில் கழிவுநீரை வெளியேற்றினால், வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று துணை ஆட்சியர் ரத்னா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

sub collector rathna

By

Published : Aug 30, 2019, 10:07 AM IST

சென்னை பூந்தமல்லி பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவைகளிலிருந்து வரும் கழிவுநீர், வாகனங்கள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. இதனை தனியார் கழிவுநீர் வாகனங்கள் சட்டவிரோதமாக பூந்தமல்லி பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள மழைநீர் கால்வாய்களில் வெளியேற்றி வந்தனர். பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அதே பிரச்னை நிலவி வந்தது. சட்டவிரோத கழிவுநீர் வெளியேற்றத்தை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் பல முறை கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில், கழிவுநீர் வாகன உரிமையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் பூந்தமல்லியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் திருவள்ளூர் மாவட்ட துணை ஆட்சியர் ரத்னா பங்கேற்று கழிவு நீர் லாரி உரிமையாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, வீடுகள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவைகளில் அகற்றப்படும் கழிவுநீரை திறந்த வெளியில் வெளியேற்றக் கூடாது. முகப்பேர் கோயம்பேடு பகுதியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்திற்கு செல்வதைக் காரணம் காட்டி, திருமழிசை பகுதியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு சென்று முறையாக கழிவு நீரை வெளியேற்ற வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.

இதனை மீறி திறந்த வெளியில் கழிவு நீரை வெளியேற்றினால், கழிவு நீர் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், அறிவுறுத்தியபடி கழிவுநீர் வெளியேற்றப்படுகிறதா? என்பதைக் கண்காணிக்க வருவாய்த்துறை, காவல்துறையினர் நகராட்சி நிர்வாகம் ஆகிய துறைகளை ஒன்றிணைத்து கண்காணிப்புக்குழு அமைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கழிவுநீர் வெளியேற்ற போதிய வசதி உள்ளனவா? என்பது குறித்து திருமழிசையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details