திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்த நிலையில், இப்பகுதியில் கடந்த மூன்று நாட்களாக சரிவர மின் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இது குறித்து கேட்பதற்கு நேற்று மின் வாரிய அலுவலர்களிடம் பொதுமக்கள் முறையிட்டபோது, அவர்கள் அலட்சியமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திடீர் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மணவாளநகர் காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். முறையாக மின் விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என காவல் துறையினர் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்த திடீர் மறியலால், திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.