திருவள்ளூர் அருகே உள்ள பேரத்தூர் மாந்தி கிராமத்தில் இடி மின்னல் தாக்கியதில் ஐயப்பன் என்பவரது வயலில் நடவு வேலை செய்துகொண்டிருந்த பேரத்தூர் காலனியைச் சேர்ந்த அன்னபூரணி நடவு நட்டுக் கொண்டிருந்தபோது இடி, மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவருடன் இருந்த 15 பேரில் முருகன் (35), உஷா (36) என்ற இருவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மேலும், இடி மின்னல் தாக்கியதில் படுகாயமடைந்த கலா (38), அற்புதம் (44), நாகம்மாள் (38), சின்னப்பொண்ணு (40) ஆகிய நான்கு பேர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இடி, மின்னல் தாக்கியதில் பெண் உயிரிழப்பு இது குறித்து வெங்கல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களின் உறவினர்களிடமும் உயிரிழந்த அன்னபூரணியின் குடும்பத்தாரிடமும் ஆறுதல் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘இடி, மின்னல் தாக்கும்போது மக்கள் அனைவரும் அவரவர் வீட்டில் இருக்க வேண்டும். குடிமராமத்துப் பணிகள் அனைத்து ஏரிகளிலும் செய்யப்பட்டுள்ளதால் யாரும் நீரில் இறங்கக் கூடாது. உயிரிழந்த அன்னபூரணியின் குடும்பத்திற்கு தகுந்த இழப்பீடு வழங்கப்படும்’ என்று கூறினார்.
இதையும் படிங்க: மின்னல் தாக்கி பெண் பலி