திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடுப் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சிறிய ரக சரக்கு வாகனத்தை நிறுத்துமாறு காவல்துறையினர் சைகை காட்டியபோது அதன் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்துள்ளார்.
இதனையடுத்து வாகனத்தை சோதனையிட்டபோது அதில் ஒன்றரை டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இந்த ரேஷன் அரிசி படகு மூலம் ஆந்திராவிற்கு கடத்துவதற்காக கொண்டுவரப்பட்டு இருக்கலாம் என திருப்பாலைவனம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.