திருவள்ளூர்: மப்பேடு அடுத்த கீழச்சேரியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகின்றனர். இங்கு ஊழியர்களைப் பணி அமர்த்த ஆறு ஒப்பந்ததாரர்கள் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் கூடுதல் ஊழியர்களைப் பணியமர்த்த தொழிற்சாலை நிர்வாகம் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. இதில் தொழில் போட்டியின் காரணமாக கீழச்சேரி ஒப்பந்ததாரர்களைப் பணியமர்த்திய ஊழியர்களை எதிர்தரப்பினர் பலமாகத் தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து மப்பேடு அடுத்த கொண்டஞ்சேரியில் தங்கியிருந்த பத்ருல் இஸ்லாம் அப்துல் ராவ், அப்துல் அசிம் ஆகியோரை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று பலமாகத் தாக்கியுள்ளது. பின்னர் காயமடைந்தவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுதிக்கப்பட்டனர்.
இதில் பலத்த காயமடைந்த அப்துல் அசீம் மேல்சிகிச்சைக்காக சென்னை கொண்டுசெல்லப்பட்டும், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். புகாரின்பேரில் காவல் துறை வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளைத் தேடிவருகின்றது.
இதையும் படிங்க:திருமண நாளன்று தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்