ஆவடி அருகே பெருமாள் கோயிலுக்கு சொந்தமான குளம் உள்ளது. இந்த குளம் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. தூர்வாரப்படாமல் கிடந்த இந்த குளத்தை தூர்வாரும் பணியினை, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இன்று தொடக்கி வைத்தார். மேலும் மழை பெய்து வருவதால் உடனடியாக குளத்தை சீரமைக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
'தமிழ்நாட்டில் இந்தி அரசியல் தேவையற்றது' - மாஃபா பாண்டியராஜன் - mafa pandiarajan
திருவள்ளூர்: "தமிழ்நாட்டில் இந்தி மூன்றாவது மொழிதான். அதை வைத்து அரசியல் செய்வது தேவையற்றது" என்று, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தி என்பது தமிழ்நாட்டில் மூன்றாவது மொழி என்று மத்திய அரசு ஏற்றுக்கொண்ட ஒன்று. அதை வைத்து அரசியல் செய்வது தேவையற்றது. புதிய கல்விக்கொள்கை குறித்து பல அறிஞர்களை கொண்டு ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் இடம் கலந்து ஆலோசனை நடத்தி நல்ல முடிவு எடுக்கப்படும். வரையறுக்கப்பட்ட முடிவுகளை மத்திய அரசிடம் கொண்டுச் செல்லப்படும்" என்றார்.