திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த முத்துக்கொண்டாபுரம் கிராமத்திற்கு அருகே உள்ள கொசஸ்தலை ஆற்றின் மேம்பாலத்திற்கு அடியில் பிளாஸ்டிக் கவரில் இறந்ந நிலையில் பெண் பச்சிளம் குழந்தை இருப்பதாக ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் கனகம்மாசத்திரம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அதன் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது தொப்புள் கொடி காயாத முன்பே பிறந்த பெண் குழந்தை ஒன்று பிளாஸ்டிக் கவரில் அடைத்து சடலமாக கிடந்தது.