திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் எல்என்டி தனியார் கப்பல் கட்டும் தளம் உள்ளது. பாதுகாப்பு அமைச்சகமும் எல்என்டி நிறுவனமும் இக்கப்பல் தலத்தில் கடலோரக் காவல்படைக்கு ஏழு அதிநவீன ரோந்து கப்பல்களைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை கடந்த 2015ஆம் ஆண்டு மேற்கொண்டனர்.
இந்த ஒப்பந்தத்தின்படி விக்ரம், வீரா, விஜயா, வராஹ எனப் பெயரிடப்பட்ட நான்கு ரோந்து கப்பல்கள் கடலோரக் காவல் பணியில் இணைக்கப்பட்டு ரோந்துப் பணியில் ஈடுபட்டுவருகின்றது. ஐந்தாவது கப்பலான வராட் என்னும் பெயரிட்ட கப்பல் நாளை கடலோரக் காவல் படையுடன் இணைக்கப்பட உள்ளது.
ஆறாவது கப்பல் முழுமையாகக் கட்டிமுடிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று அக்கப்பலைக் கடலில் இறக்கும் நிகழ்ச்சி காட்டுப்பள்ளி துறைமுகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய கப்பல் (தனிப்பொறுப்புடன் கூடிய), ரசாயனம் மற்றும் உரத் துறை இணையமைச்சர் மன்சுக் மாண்டவியா, அவரின் மனைவி கீதா மாண்டவியா அறிமுகப்படுத்தினர்.