திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த 25ஆம் தேதி 12ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையர் ப்ரியங் கனுங்கோ தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் விடுதியில் விசாரணை நடத்தினர்.
மேலும் விடுதி காப்பாளர்கள், ஆசிரியர்கள் என அனைவரிடமும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணைக்குப் பின் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் அருகேவுள்ள விருந்தினர் மாளிகையில் மாணவியின் தாயார், அண்ணன், அண்ணி, சித்தி ஆகியோரிடம் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஆணையத் தலைவர், “மாணவியின் இறப்பு குறித்து இன்று (ஜூலை 28) காலை பள்ளி விடுதியில் விசாரணை மேற்கொண்டோம். பள்ளியின் நிர்வாகி, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் சக மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டோம்.