தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிசிடிவி: பெண் வேடத்தில் வந்த மர்ம நபர்... போலீசார் தீவிர விசாரணை... - Mysterious person in thiruvallur

திருவள்ளூரில் பெண் வேடத்தில் வீடு ஒன்றில் சுற்றித்திரிந்த மர்ம நபர் குறித்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

பெண் உருவத்தில் வந்த மர்ம நபர்.. போலீசார் தீவிர விசாரணை
பெண் உருவத்தில் வந்த மர்ம நபர்.. போலீசார் தீவிர விசாரணை

By

Published : Oct 30, 2022, 10:02 AM IST

திருவள்ளூர்: திருத்தணியின் பட்டாபிராமபுரம் கோகுல் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் வேல் குமார் (42). இவர் பைபாஸ் சாலை பகுதியில் விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்து கடையை நடத்தி வருகிறார். இந்த நிலையில் வழக்கம்போல் வேல்முருகன் கடைக்குச் சென்றுள்ளார்.

இதனால் வேல் குமாரின் மனைவி உள்பட 2 குழந்தைகள் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அப்போது வேல் குமாரின் வீட்டின் அருகில் மர்ம நபர் ஒருவர் இருப்பதாக எதிர் வீட்டில் வசிக்கும் பாபு, வேல் குமாருக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு விரைந்து வந்த வேல் குமார், வீட்டிலிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்துள்ளார்.

பெண் உருவத்தில் வந்த மர்ம நபர் குறித்த சிசிடிவி காட்சி

அப்போது அதில், வீட்டின் சுற்றுப்புற சுவர் மீது அடையாளம் தெரியாத ஒருவர் முகமூடி மற்றும் பெண் வேடமணித்து உள்ளே வந்து பின் வெளியே செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்துள்ளன. அதனை திருத்தணி போலீசாரிடம் ஒப்படைத்து வேல் குமார் புகார் அளித்தார். அந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை!

ABOUT THE AUTHOR

...view details