திருவள்ளூரை அடுத்த காக்களூரில் சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் திருவள்ளூர், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று ஊத்துக்கோட்டை பகுதிகளில் இருந்து இந்நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களைக் ஏற்றிக் கொண்டு தனியார் வேன் ஒன்று திருவள்ளூர் நோக்கி சென்றுள்ளது.
வேன் கவிழ்ந்து விபத்து: 10க்கும் மேற்பட்ட பெண்கள் காயம்! - accident
திருவள்ளூர்: ஒதப்பை கிராமம் அருகே தனியார் நிறுவன வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 10க்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
அந்த வேன் ஒதப்பை கிராமத்தில் உள்ள தேவாலயம் அருகே வந்தபோது, அங்கிருந்த வேகத்தடையில் வேனின் ஓட்டுனர் பிரேக் அடிக்க முயன்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த வேன், நிலைதடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த 10க்கும் மேற்பட்ட பெண்களை, அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பென்னாலூர் பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.