தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூர் தெருக்கூத்து கலைஞர்கள் 45 பேருக்கு நிவாரணம்! - MLA Rajendran provided relief aid to 45 street performers artists

திருவள்ளூரில் தெருக்கூத்து கலைஞர்கள் 45 பேருக்கு சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் வழங்கினார்.

ராஜேந்திரன்
ராஜேந்திரன்

By

Published : Nov 23, 2021, 7:35 PM IST

திருவள்ளூர்: தெருக்கூத்து கலைஞர்கள் 45 பேருக்கு நிவாரண உதவி சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் வழங்கினார்.
மழையால் வாழ்வாதாரம் இழந்து தவித்த தெருக்கூத்து நடன கலைஞர்களுக்கு திருவள்ளூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் நிவாரணப் பொருள்கள் வழங்கினார்.
தொடர் மழை காரணமாக திருவள்ளூர் பட்டறைபெருமந்தூர் பகுதியில் உள்ள நடனக் கலைஞர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்தனர், அவர்களுக்கு திருவள்ளூர் வருவாய்த்துறையினர் சார்பில் 45 தெருக்கூத்து நடன கலைஞர்களுக்கு தேவையான அரிசி மளிகைப் பொருள்கள்,வேட்டி சேலை, பாய் போன்ற பொருள்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

திருவள்ளூர் தெருக்கூத்து கலைஞர்கள் 45 பேருக்கு நிவாரணம்!

இந்தத் தெருக்கூத்து நடன கலைஞர்களுக்கு திருவள்ளூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி., ராஜேந்திரன் நிவாரண பொருள்கள் வழங்கி கௌரவித்தார்.

அப்போது அவருடன் வருவாய் கோட்டாட்சியர் ரமேஷ், வட்டாட்சியர் செந்தில்குமார், ஊராட்சி மன்றத் தலைவர், ஒன்றிய கவுன்சிலர், உள்ளாட்சி பிரதிநிதிகள், மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க : நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்த தெருக்கூத்து கலைஞர் மரணம்

ABOUT THE AUTHOR

...view details