திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில், தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பாக, 18 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள 2007 தொழிலாளர்களுக்கு திருமணம், மகப்பேறு, கல்வி, கண் கண்ணாடி, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிக்கான தொகைகளை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் வழங்கினர்.
நிகழ்ச்சியில் 189 பயனாளர்களுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.3,77,750, திருமண உதவித்தொகையாக 116 பயனாளர்களுக்கு ரூ.4,10,000, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகையாக 37 பயனாளர்களுக்கு ரூ.8,85,000, விபத்து மரண உதவித்தொகையாக 1 பயனாளருக்கு ரூ.1,02,000, ஓய்வூதியம் உதவித்தொகை 1157 பயனாளர்களுக்கு ரூ.11,57,000 என மொத்தம் மொத்தம் 1500 தொழிலாளர்களுக்கு ரூ. 29,31,750 மதிப்பில் நலத்திட்ட உதவிக்கான தொகைகளை பால்வளத்துறை அமைச்சர் நாசர் வழங்கினார்.