தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நமது அம்மா படிப்பவர்கள் அறிவாளிகள்' - அமைச்சர் காமராஜ் - minister kamaraj

திருவாரூர்: நமது அம்மா படிப்பவர்கள் சிறந்த அறிவாளியாகவும், சிறந்த பொதுநலவாதிகளாகவும், மக்கள் தொண்டு செய்பவர்களாகவும் இருப்பார்கள் என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

minister
minister

By

Published : Jan 19, 2020, 3:26 PM IST

திருவாரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கு வாக்களித்த, குடவாசல் ஒன்றியத்துக்கு உட்பட்ட வாக்காளர்களை நேரில் சந்தித்து அமைச்சர் காமராஜ் நன்றி தெரிவித்தார்.

'நமது அம்மா படித்தால் அறிவாளி'

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'நமது அம்மா தினசரி நாளிதழைப் படித்தால் அறிவாளியாகவும், பொதுநலவாதியாகவும், மக்கள் தொண்டு செய்பவர்களாகவும் இருப்பார்கள். எனவே அனைவரும் நமது அம்மா படிக்க வேண்டும்.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்றுபெய்த மழையில் அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா பயிர்கள் சாய்ந்துள்ளன. தற்போது மழையின்றி வெயில் இருப்பதால் நிலைமை சீராகும். நிலைமை சீராக இல்லையெனில் நாளை மறுநாள் தஞ்சாவூரில் விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள், அலுவலர்களைக் கொண்டு ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களுக்குத் தீர்வு காணப்படும்' என்றார்.

'நமது அம்மா' படிப்பவர்கள் அறிவாளிகளாக இருப்பார்கள் - அமைச்சர் காமராஜ்

இதையும் படிங்க: 'முரசொலி வைத்திருந்தால் தமிழன், மனிதன் எனப் பொருள்' - ரஜினிக்கு முரசொலி பதிலடி

ABOUT THE AUTHOR

...view details