திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட உழவர் சந்தை அருகே செல்லும் சென்னை - திருப்பதி சாலையின் இருபுறமும் 100-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள், பூ கடைகள், பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட கடைகளை வைத்து வியாபாரம் செய்துவருகின்றனர். இந்த நடைபாதை கடைகளால், உழவர் சந்தைக்கு வந்து செல்வோரும், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிப்படுவதாக நகராட்சிக்கு புகார் சென்றது.
ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிய அலுவலர்களுடன் வியாபாரிகள் வாக்குவாதம் - Merchants road pickup
திருவள்ளூர்: உழவர் சந்தை அருகே இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிய நகராட்சி அலுவலர்களுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புகாரின் பேரில் நகராட்சி ஆணையர் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உத்தரவிட்டார். ஆணையர் உத்தரவின் பேரில் நகராட்சி அலுவலர்கள் மற்றும் போக்குவரத்து காவல் துறையினர் கடைகளை அகற்றினர். இதனால் அதிர்ச்சியடைந்த வியாபாரிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தகவலறிந்து வந்த காவல் துறையினர் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.