திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில், ஆர்.கே. பேட்டை வட்டம் வீரமங்கலம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினர் பி.எம். நரசிம்மன் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் துறைசார்ந்த நலத்திட்டங்கள் குறித்து அலுவலர்கள் விளக்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதனையடுத்து ரூபாய் 53 லட்சம் மதிப்பீட்டில் 1,026 பயனாளிகளுக்கு தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கி மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி பேசுகையில், “அனைத்து தரப்பு மக்களுக்கும், குறிப்பாக கிராமப் பகுதிகளில் வசித்துவருபவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் உடனுக்குடன் சென்றடையும் நோக்கில் தமிழ்நாடு அரசு கிராமங்களில் முகாம்களை நடத்தி பயனாளிகளுக்கு உதவிகள் செய்துவருகின்றது.