தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிநீர் பிரச்னையைத் தீர்க்க தமிழ்நாடு அரசு 150 மில்லியன் லிட்டர் தண்ணீர் திட்டத்திற்கு அடிக்கல் - Tiruvallur

திருவள்ளூர்: குடிநீர் பிரச்னையைத் தீர்க்க தமிழ்நாடு அரசு 150 மில்லியன் லிட்டர் தண்ணீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

மா.பா. பாண்டியன்

By

Published : Jun 27, 2019, 11:03 PM IST

திருவள்ளூர் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று ஜமாபந்தி நிறைவு விழா மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பா.பெஞ்சமின், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டு 1,051 பயனாளிகளுக்கு 10 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

குடிநீர் பிரச்னையைத் தீர்க்க தமிழ்நாடு அரசு 150 மில்லியன் லிட்டர் தண்ணீர் திட்டத்திற்கு அடிக்கல்
இவ்விழாவில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசும்போது, ’மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 50 வாக்குறுதிகளில் 32 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 18 வாக்குறுதிகள் சிறுக, சிறுக நிறைவேற்றி முடிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெம்மேலியில் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்திற்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றதாகவும், இத்திட்டத்தின் மூலம் காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் குடிநீர் பிரச்னையை தீர்த்து வைக்க முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details