திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பாபிரெட்டிப் பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் சூர்யா (21). மெக்கானிக்கான இவர், தனது பிறந்த நாளான நேற்று (ஜூலை 6) நகரி பகுதியைச் சேர்ந்த நண்பர் லோகேஷ்(23) என்பவருடன் பொன்பாடியில் உள்ள மதுக்கடையில் மது அருந்தினர்.
லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - இளைஞர் உயிரிழப்பு - திருவள்ளூர் மாவட்ட செய்திகள்
திருவள்ளூர் : திருத்தணி அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், சம்பவ இடத்திலேயே இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
பின்னர், இருவரும் இருசக்கர வாகனத்தில் திருத்தணி நோக்கி வந்துபோது, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, இருசக்கர வாகனத்தின் முன் சென்ற கண்டெய்னர் லாரியை காவல் துறையினர் மடக்கி பிடித்தனர். அதனால், ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டு நிறுத்தியதால், பின்னால் வந்த இருசக்கர வாகனம் லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், லோகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த சூர்யாவை மீட்ட காவல் துறையினர், சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து திருத்தணி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.