ஆந்திராவைச் சேர்ந்த தமிழ்செல்வன்(35) லாரி ஓட்டுநராக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில், இவர் நேற்று தனது லாரியை ஆந்திரா நோக்கி ஓட்டிச் சென்றுள்ளார். பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென லாரி பழுதாகியதால், சரி செய்வதற்காக சாலையோரம் உள்ள பழுது பார்க்கும் கடையில் நிறுத்தப்பட்டது.
நின்றுகொண்டிருந்த லாரியில் தீ!
திருவள்ளூர்: பழுதாகி நின்றுகொண்டிருந்த லாரியில் திடீரென தீ பற்றி எரிந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர்
அப்போது, லாரியில் வெல்டிங் வேலை செய்து கொண்டிருக்கையில், யாரும் எதிர்பாராதவிதமாக தீ பிடித்து எரிந்தது. இதுகுறித்து, உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள், பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியே புகைமூட்டமாக காட்சியளித்தது. மேலும், நின்றுக்கொண்டிருந்த லாரியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.