தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருந்து பொருள்கள் ஏற்றிவந்த லாரி அம்மா குடிநீர் நிலையத்தில் மோதி விபத்து! - மறுத்து பொருள்கள் ஏற்றிவந்த லாரி விபத்து

திருவள்ளூர்: ஆந்திராவிலிருந்து மருந்து பொருள்களை ஏற்றிவந்த லாரி ஒன்று செங்குன்றம் அருகே உள்ள அம்மா குடிநீர் நிலையத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

மருந்து பொருள்கள் ஏற்றிவந்த லாரி அம்மா குடிநீர் நிலையத்தில் மோதி விபத்து!
Thiruvallur lorry accident

By

Published : Jul 20, 2020, 12:44 AM IST

விஜயவாடாவிலிருந்து மருந்து பொருள்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று கிண்டியில் உள்ள குடோனுக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே உள்ள புழல் மத்திய சிறைச்சாலை சிக்னல் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி அருகில் இருந்த அம்மா குடிநீர் நிலையத்திற்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.

இதில், அம்மா குடிநீர் அலுவலகம் சுற்றுச்சுவர் கதவுகள் உடைந்து சேதமடைந்தன. நல்வாய்ப்பாக முழு ஊரடங்கு தளர்வு உள்ள நிலையில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு காவல் ஆய்வாளர் சிவராமன் ஜெயம் சம்பவ இடத்திற்கு வந்த லாரி ஓட்டுநர் நடராஜ் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details