கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுக்காவைச் சேர்ந்தவர் ரஞ்சித். இவரும் இவரது நண்பர் சம்பத்தும் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் காவல் எல்லைக்குட்பட்ட வள்ளுவர் கிராமத்தில் வீடு எடுத்து தங்கி மீஞ்சூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.
திருவள்ளூர் கொலை வழக்கு - இளைஞருக்கு ஆயுள் தண்டனை! - thiruvallur murder
திருவள்ளூர்: கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
murder acquest
இவரது வீட்டின் அருகே வசித்து வந்த வினோத் என்பவருக்கும் ரஞ்சித்துக்கும் இடையே கடந்த 2017ஆம் ஆண்டு ஏற்பட்ட மோதலில், ரஞ்சித் படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக வினோத் மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் அவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கின் விசாரணை திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், வழக்கின் விசாரணை இன்று முடிவடைந்ததையடுத்து, வினோத்துக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.