திருவள்ளூர்: காவல்துறை சார்பில் மாவட்டத்தில் போதை புழக்கத்தைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபாஸ் கல்யாண் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல் பி ஜான் வர்கீஸ் கலந்துகொண்டு போதைப் பொருளுக்கு எதிராக மாணவர்கள் அமைத்திருந்த கண்காட்சியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கில் மாணவ மாணவிகள் தங்களது பேச்சு மற்றும் நடிப்பின் மூலமாகப் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பின்னர் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு நேரடியாகப் புகார் அளிக்க 9444005105 என்ற வாட்ஸப் எண்ணை வெளியிட்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் பேசும்போது, மாவட்ட நிர்வாகம் சார்பில் போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், போதைக்கு அடிமையானவர்களை மாற்றும் வகையிலான ஆர்எஸ்எஸ் சார்பில் தனியாகப் போதைப்பொருள் மறுவாழ்வு மையம் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும் மாவட்ட எஸ்பி பேசுகையில், மாவட்டம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்கள் அதிகமாகப் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக உள்ளனர் எனவும், அவர்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்க அனைத்து முயற்சிகளும் மாவட்ட நிர்வாகத்துடன், மாவட்ட காவல் துறை இணைந்து செயல்படும் எனக் கூறினார்.
போதைப் பொருள் விற்பனை தொடர்பாக புகார் அளிக்க பிரத்யேக வாட்ஸப் எண் வெளியீடு இதையும் படிங்க:பெண் தற்கொலை - மருத்துவர்கள் அலட்சியம் காரணமா?