திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள பொது கும்மிடிப்பூண்டி பாலீஸ்வரன் கண்டிகையைச் சேர்ந்தவர் வனஜா (எ) ராதா (42). இவர் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் மளிகைக் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், வனஜாவின் தனது மளிகைக் கடையில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக சிப்காட் காவல் துறையினருக்கு முன்னதாகத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், காவல் துறையினர் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, வனஜா மளிகைக்கடையில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது.