திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தண்டலச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சரவணன்-ஜீவிதா தம்பதியினர். சரவணன் தனியார் நிறுவன ஒப்பந்ததாரராகவும் தனது வீட்டின் அருகில் மளிகை கடை ஒன்றையும் நடத்திவருகிறார். இந்தத் தம்பதிக்கு பிரியா (15 ), ஷாலினி (14) என்ற இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் கவரப்பேட்டை அரசுப் பள்ளியில் படித்துவருகின்றன்ர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஜீவிதா, பிரியா ஆகிய இருவரும் பழையனூர் கோயிலுக்கும் இளைய மகள் ஷாலினி பள்ளிக்கும் சென்றிருந்த நிலையில், நேற்று மதியம் இரண்டு மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு சரவணன் வெளியே சென்றுள்ளார். இதையடுத்து, ஜீவிதா கோயிலிலிருந்து வீடு திரும்பிவந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஜீவிதா வீட்டின் உள்ளே சென்றுபார்த்தபோது பீரோவிலிருந்த 25 சவரன் நகை, ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. பின்னர் இது குறித்து ஜீவிதா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.