சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தெலுங்கு-கங்கா ஒப்பந்தத்தின்படி ஆந்திர மாநிலத்தில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதி நீர் ஆண்டுக்கு 12 டிஎம்சி திறந்துவிடப்படுவது வழக்கம். கண்டலேறு அணையில் போதிய நீர் இல்லாததால் நீர் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. சென்னையில் போதிய மழை இல்லாததாலும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், கிருஷ்ணா நதி நீரை திறந்துவிடக் கோரி ஆந்திர அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதினார்.
இந்த கோரிக்கையை அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் ஆந்திரா முலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினர். அதன் அடிப்படையில் செப்டம்பர் 25ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து வினாடிக்கு வினாடிக்கு 500 கனஅடி வீதம் திறக்கப்பட்டு படிப்படியாக ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்துள்ளது.