திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் திருவள்ளூர் தனி நாடாளுமன்றத் தொகுதி மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் லோகரங்கனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது அவர், தான் அரசியலுக்குத் தாமதமாக வந்துள்ளதாக உணர்வதாக வருத்தம் தெரிவித்தார். இனிமேல் தனது வருமானத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பேன் என்றும், இனிமேல் தனது வருமானத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பேன் என்றும், மக்களிடம் பணம் பெற்றுக்கொண்டு கட்சி நடத்த மாட்டேன் என்றும் வாக்குறுதியளித்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலைகள் துவங்க வந்தால் பணம் கேட்கும் அவலநிலையிருப்பதால் ஆந்திர மாநிலத்திற்கு அனைத்து தொழிற்சாலை சென்றுவிட்டதாகவும் அவர்களை மீண்டும் திருவள்ளூர் மாவட்டத்திற்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஏழ்மையில் உள்ளவர்கள் இலவசத்தை வாங்கும் நிலை உள்ளது இந்த நிலையை போக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
காங்கிரஸ், திமுக 50 ஆண்டுகளாக நாட்டிற்கு ஒன்றும் செய்யவில்லை என்றும் குடும்பம் செழிக்கவே அரசியல் செய்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.