திருவள்ளூர்:மீஞ்சூர் அடுத்த வல்லூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் குடியிருப்பு அமைந்துள்ளது. வல்லூர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றும் பொறியாளர்கள், ஊழியர்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் இங்குள்ள குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர்.
சுரேஷ் என்ற பொறியாளர் தமது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், சுரேஷ் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தார்.