திருவள்ளூர்:திருத்தணியில் உள்ள அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழும் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று (பிப்ரவரி 6) 29 திருமணங்கள் நடைபெற்றன.
காற்றில் பறந்த கரோனா கட்டுப்பாடுகள்

இதனால் அரசின் விதிமுறைகளான கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும், முகக் கவசம் அணிய வேண்டும் என்ற அனைத்தும் காற்றில் பறந்தன. மேலும், முருகனை தரிசிக்கத் திருமண தம்பதிகளுடன் கூட்டம் கூட்டமாகச் சென்று தரிசிப்பதை கோயில் நிர்வாகம் கண்டுகொள்ளாததால் தொற்றுப் பரவும் இடர் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் திருமணத்திற்கு வந்தவர்கள், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சாமி தரிசனம் செய்யவந்தவர்கள் அதிகளவில் வாகனங்களில் வந்ததால் கோயில் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இரண்டு மணிநேரம் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
இதையும் படிங்க:நீங்கா நினைவுகளுடன் விடைபெற்றார் இசைக்குயில் லதா மங்கேஷ்கர்!