திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த எஸ்.பி.ஹாசினி ஸ்ரீ என்ற சிறுமி, சக்கராசனத்தில் நின்றபடி, ஒரு நிமிடத்தில் 137 முறை தலையையும், இடுப்பையும் இணைத்து இன்று (அக்.2) புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த சுரேஷ் - ஹேமாவதி தம்பதியர் மகள் எஸ்.பி.ஹாசினி ஸ்ரீ(9). அங்குள்ள மதன்லால் கெமானி விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருகிறார்.
உலக சாதனை செய்து அசத்திய திருவள்ளூர் சிறுமி.. கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் யோகாசன பயிற்சி பெற்று வருகிறார். இவர், சக்கராசனத்தில் நின்ற படி, ஒரு நிமிடத்தில், 137 முறை தலையையும், கீழ் இடுப்பு பகுதியையும் இணைத்து புதிய உலக சாதனை படைத்தார்.
இவரது சாதனை, ‛இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்’, ‛வேல்ட் வைட் புக் ஆப் ரெக்கார்ட்’, ‛அசிஸ்ட் உலக சாதனை’, ஆகிய மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தன. சாதனை படைத்த சிறுமி ஹாசினி ஸ்ரீ, அவருக்கு யோகா பயிற்சி அளித்த பயிற்சியாளர் சந்தியா ஆகியோரை, சக மாணவர்களும், கும்மிடிப்பூண்டி பகுதி மக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: பீட்ரூட் சாறு மூலம் பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள்... மதுரை மாணவி அசத்தல்...