தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூரில் கடன் தொல்லையால் தீக்குளித்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு! - ஆட்டோ ஓட்டுநர் மருத்துவமணையல் சிகிச்சை பலனின்றி உயிரழப்பு

திருவள்ளூர்: கடன் தொல்லையால் தீக்குளித்த ஆட்டோ ஓட்டுநர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருவள்ளூரில் கடன் தொல்லையால் தீக்குளித்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு!
திருவள்ளூரில் கடன் தொல்லையால் தீக்குளித்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு!

By

Published : Jul 21, 2020, 10:04 PM IST

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் பால்பண்ணை ரவி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கர்(56), ஆட்டோ ஓட்டி வாழ்க்கை நடத்திவந்தார். இந்நிலையில், இவர் ஓட்டும் ஆட்டோவிற்கு பைனான்ஸ் தனியார் நிறுவனத்தில் பெற்றுள்ளார்.

அந்தக் கடனை, கடந்த நான்கு மாதங்களாக சரிவர செலுத்தமுடியவில்லை. இதனால் கடனுக்கு பணம் கொடுத்தவர்கள் இவரை கேட்டு நச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் மனமுடைந்த சிவசங்கர் நேற்று (ஜூலை20) காலை 11 மணியளவில் மாதவரம் பால்பண்ணை பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கட்டடத்தில் வைத்து தனக்கு தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

இதில் உடல் முழுவதும் தீ பற்றி எரிய தொடங்கியதும், வலியால் துடித்த அவர் சப்தமிட்டார். இந்த சப்தம் கேட்டு அருகேயிருந்தவர்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிர் இழந்தார். இது குறித்து மாதவரம் பால்பண்ணை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க...அரசு முத்திரையைத் தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்தவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details