திருவள்ளூர் மாவட்டம் வெள்ளியூர் அருகே விபத்தில் சிக்கிய சிட்டம்பக்கம் கிராமத்தை சேர்ந்த ராஜன், லாவண்யா மற்றும் சரண்யா ஆகிய மூவரும் பலத்த காயத்துடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அதில் ராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த லாவண்யாவும், சரண்யாவும் சிகிச்சை பெற்றுவருகின்றனர் .
மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றபோது லாவண்யா அணிந்திருந்த கொலுசு, நகை, பணம் உள்ளிட்டவைகளை கழட்டியுள்ளார் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் உதவியாளர் அருண்குமார். ஆனால் அதனை மருத்துவமனையில் உறவினர்களிடமும் ஒப்படைக்காமல் கையோடு எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. மயக்கத்தில் இருந்து மீண்ட லாவண்யா தனது நகை, கொலுசு, செல்போன், பணம் குறித்து உறவினர்களிடம் தெரிவித்துள்ளார் .