நவீன யுகத்தில் இந்தியா எத்தனையோ வகையில் முன்னேறியிருந்தாலும், இங்கு பின்னிக் கிடக்கும் சாதிய வலையின் முடிச்சுகள் மட்டும் இன்னும் அவிழ்க்கவேபடவில்லை. திருவள்ளூர் மாவட்டம், ஆத்துப்பாக்கம் பஞ்சாயத்து தலைவர் அமிர்தம். இவர் பட்டியலின வகுப்பை சேர்ந்தவர் என்பதாலேயே அடுத்தடுத்து ஒடுக்கப்பட்டுள்ளார்.
இவரை 74 ஆவது சுதந்திர தினம் அன்று கொடியேற்று விழாவிற்கு அருகில் உள்ள பள்ளியில் அழைத்துள்ளனர். ஆனால், அதன் பின்னர் வரவேண்டாம் என கூறியுள்ளனர். இதே போல குடியரசு தினத்தன்று கொடியேற்ற சென்றபோதும், முன்னாள் தலைவர் ஹரிதாஸ் என்பவர் தடுத்ததாகக் கூறப்படுகிறது. அதோடு இவர் பஞ்சாயத்து தலைவர் அமிர்தத்தைத் திட்டியதாகவும் கூறப்படுகிறது.