திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சாமிரெட்டி கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். விவசாயியான இவர், தனது குடும்பத்துடன் அம்பத்தூரில் உள்ள உறவினர் வீட்டுக்குச் செவ்வாய்க்கிழமையன்று சென்றிருந்தார். பின்னர், பூட்டிய இவரது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள், சொக்கலிங்கத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து உடனடியாக வீட்டிற்கு வந்த சொக்கலிங்கம், அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 15 சவரன் நகை, இரண்டரை லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் 50 சவரன் நகை கொள்ளை...! - thiruvallur
திருவள்ளூர்: அடுத்தடுத்து இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை, இரண்டரை லட்சம் ரூபாய் பணம் உள்ளிட்டவைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
theft
இதேபோன்று அதே பகுதியைச் சேர்ந்த தனியார் தொழில்நுட்பக் கல்லூரி ஆசிரியரான ராஜ் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்களை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர்கள் கும்மிடிப்பூண்டி காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கொள்ளையடித்துச் சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.
Last Updated : Aug 15, 2019, 11:39 AM IST