திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பெட்ரோல் பங்கில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சந்திரகாசன் தலைமையில் காவல்துறையினர்கள் தலைக்கவசம் அணிவதின் முக்கியதுவம் குறித்து விழிப்புணர்வு எற்படுத்தினர்.
பெட்ரோல் பங்கில் வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் விழிப்புணர்வு - petrol bunk
திருவள்ளூர்: பெட்ரோல் பங்குக்கு வரும் வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம் அணிவதின் அவசியம் குறித்து காவல்துரையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
காவல் அலுவலர் ஒருவர் தலைக்கவசம் அணிந்து வந்து இருசக்கர மோட்டார் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பி பொதுமக்களிடையே தலைக்கவசம் அணிவதின் அவசியம் குறித்தும்,பெட்ரோல் நிலையங்களுக்கு வரும் வாகன ஓட்டிகள் அனைவரும் தலைக்கவசம் அணிந்து வந்து பெட்ரோல் நிரப்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
பெட்ரோல் பங்குக்கு தலைக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பப்படும் என்று அறிவிப்பு பலகைகளை வைத்து தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.