தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூரில் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி. - பொது மக்கள்

திருவள்ளூர்: அரை மணி நேரம் விடாமல் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருவள்ளூரில் பெய்த அடைமழையால் பொது மக்கள் மகிழ்ச்சி.

By

Published : Jun 26, 2019, 7:23 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. தமிழகத்திலேயே அதிகபட்ச வெப்பமாக திருத்தணியில் காணப்பட்டது. இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக இரண்டு தினங்களாக இரவில் விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. திடீரென திருவள்ளூர், திருத்தணி, கனகம்மாசத்திரம், திருவாலங்காடு, ஊத்தூக்கோட்டை, பெரியபாளையம், தாமரைபாக்கம், பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாலை அரை மணி நேரம் விடாமல் மழை வெளுத்து வாங்கியது.

கோடை வெப்பத்தால் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு கொளுத்திய வெயிலாலும்,வறட்சியாலும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியிருந்தனர். இந்நிலையில், திருவள்ளூரில் இன்று அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details