தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செங்கத்தில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை! - திருவள்ளூர்

திருவள்ளூர்: செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

rain

By

Published : May 14, 2019, 10:16 PM IST

செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது. கோடை வெப்பம் தணிந்தால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கத்திரி வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வரும் இந்த சூழலில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென்று சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

பலத்த சூறைக்காற்று வீசியதால் திருவண்ணாமலை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலாற்றின் குறுக்கே உள்ள இரண்டு பெரிய மரங்கள் எதிர்பாராத விதமாக சாலையின் நடுவே முறிந்து விழுந்தது.

முறிந்து விழுந்த மரம்

தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே பெரிய மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்ற காரணத்தால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். எனினும் வெயிலின் தாக்கத்திலிருந்து இன்று பெய்த கனமழை தங்களை விடுவித்ததால் செங்கம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details