இயேசு கிறிஸ்துவின் மரணப்பாடுகளையும், அவர் சிலுவையில் அறையப்பட்டதையும் நினைவுகூரும் வகையில், உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் புனித வெள்ளி கடைப்பிடிக்கப்படுகிறது.
புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப் பாதை ஊர்வலமாக சென்ற கிறிஸ்தவர்கள்!
திருவள்ளூர்: புனித வெள்ளியை முன்னிட்டு 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அன்னை மகிமை மாதா ஆலயத்திலிருந்து சிலுவைப்பாதை ஊர்வலம் நடைபெற்றது.
பிராத்தனையில் கிறிஸ்தவர்கள்
அந்தவகையில், திருவள்ளூரில் உள்ள 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அன்னை மகிமை மாதா ஆலயத்தில் புதிய வெள்ளியை முன்னிட்டு, இயேசு கிறிஸ்து கடைசியாகக் கூறிய வார்த்தைகளை மையமாகக் கொண்ட உரைகள் நிகழ்த்தப்பட்டது.
பின்னர், ஆலையத்திலிருந்து பழவேற்காடு முக்கிய வீதிகள் வழியாக சிலுவைப்பாதை ஊர்வலம் நடைபெற்றது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு இயேசுவின் அருளைப் பெற்றனர்.