திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு கிராமம் பி.கே. நகரில் வசிப்பவர் பழனி. இவர், தன்னுடைய குடும்பத்துடன் வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய நிலையில், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து புல்லரம்பாக்கம் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் சோதனை செய்ததில் ரூ. 3 லட்சம் ரொக்கம், 17 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
வெளியே நோட்டம்... உள்ளே ஓட்டம்... வேலையை கச்சிதமாக பிரித்து மேய்ந்த திருடர்கள்! - Latest Thiruvallur news
திருவள்ளூர்: ஆளில்லா வீட்டிற்குள் புகுந்து ரூ.3 லட்சம் ரொக்கம், 17 சவரன் நகைகளை கொள்ளையடித்தவர்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Gold and money theft at ekkad village in Thiruvallur district
மேலும், வீட்டின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களில் ஒருவர் தெருமுனையில் நோட்டமிடுவதும் மற்றொருவர் வீட்டில் கொள்ளையடிப்பதுமான காட்சிகள் பதிவாகி இருந்தன.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.