திருவள்ளூர் மாவட்டம், வெங்கத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத்தில் மணவாளநகர், ஒண்டிக்குப்பம், பட்டறை, எம்.ஜி.ஆர் நகர் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளில் சேகரிக்கும் குப்பைகளை வெங்கத்தூர் கிராமத்தில் உள்ள மயானம் அருகே சேகரித்து வருவது வழக்கம். இந்நிலையில் அவ்விடத்தில் வைத்து குப்பைகளைத் தரம் பிரிக்கும் பணிக்காக இடத்தை சுத்தப்படுத்த இன்று காலை வெங்கத்தூர் ஊராட்சி சார்பில் ஜேசிபி இயந்திரம் கொண்டு வரப்பட்டது.
அப்போது குடியிருப்புப் பகுதியில் குப்பைகளைக் கொட்டவும், தரம் பிரிக்கவும் எதிர்ப்பு தெரிவித்து வெங்கத்தூர் கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் வெங்கத்தூர்- பப்பரம்பக்கம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் அறிந்ததும் பா.ம.க-வைச் சேர்ந்த ஒன்றியக் கவுன்சிலர் வெங்கடேசன் அங்கு வந்து மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார்.
குப்பைகளைக் கொட்ட எதிர்ப்பு - பொதுமக்கள் சாலை மறியல் அப்போது வெங்கடேசன் கூறும்போது, 'இப்பகுதியில் குப்பைகளைக் கொட்டுவது ஊராட்சி நிர்வாகத்தில் எடுத்த தனிப்பட்ட முடிவு கிடையாது. மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து இந்த இடத்தைத் தேர்வு செய்துள்ளார். இந்த இடத்தை மாற்றும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு மட்டுமே உள்ளது. உங்களது கோரிக்கையை மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து வேறு இடத்திற்கு மாற்ற அனுமதி கோரலாம்.
பா.ம.க-வைச் சேர்ந்த ஒன்றியக் கவுன்சிலர் வெங்கடேசன் பேட்டி மேலும் இந்த ஊராட்சியில் மாற்று இடம் கிடையாது. இடம் இருந்தால் நீங்கள் காட்டுங்கள். அந்த இடத்தில் குப்பைகளைக் கொட்ட ஏற்பாடு செய்கிறேன்' எனக்கூறி மறியலை கைவிடச் செய்தார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க:உலக செவித்திறன் விழிப்புணர்வு வாரம் - பதாகைகளுடன் மாணவர்கள் பேரணி!