திருவள்ளூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 1 முதல் 31 வரை ஊரடங்கு குறித்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் மகேஷ்வரி ரவிக்குமார், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று வரை 9 ஆயிரத்து 315 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3 ஆயிரத்து 937 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்தார்.
தற்போது தமிழ்நாடு அரசு எடுத்துவரும் தீவிர முயற்சியால் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த வாரத்தில் 20% தற்போது 12 % குறைந்துள்ளது, இதுவரை 64 தொழிற்சாலைகளில் 9 ஆயிரத்து 240 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.