பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை ஒழிக்கும் விதமாகப் பசுமை தாயகம் அமைப்பு சார்பில் விழிப்புணர்வு பரப்புரை மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து வீடுகள்தோறும் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இரண்டு கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் கொடுப்போருக்கு ஒரு கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டது.
இதில் பொதுமக்கள் தங்கள் பகுதியிலிருந்த பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்து மூட்டை மூட்டையாக ஆர்வமுடன் கொண்டு வந்து அரிசியைப் பெற்றுச்சென்றனர். இதனைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டி பகுதி முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் வகையில் பசுமை தாயகம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாகனத்தில் சென்று பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.