தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வரிசையாக சாய்ந்த மின்கம்பங்கள் - பொதுமக்கள் தப்பியோட்டம் - திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர்:  சேதமடைந்த நான்கு மின் கம்பங்கள் அடுத்தடுத்து கீழே சரிந்ததால் சாலையில் நடந்து கொண்டிருந்த பொதுமக்கள் ஓடிச் சென்றனர்.

Four electric poles fell on the road in near Thiruvallur
Four electric poles fell on the road in near Thiruvallur

By

Published : Aug 28, 2020, 7:25 PM IST

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் அனைத்து மின் கம்பங்களும் 20 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டதாகும். இந்த மின்கம்பங்களில் சிமெண்ட் கலவைகள் உதிர்ந்து இரும்பு கம்பிகள் வெளியில் தெரியும்படி எலும்பு கூடு போன்று உருக்குலைந்து காணப்படுகிறது. ஏற்கனவே இது குறித்து மின்வாரிய அலுவலர்கள் கவனத்திற்கு அப்பகுதி மக்கள் கொண்டு சென்றும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் இன்று(ஆகஸ்ட் 28) காலை அங்குள்ள வரதப்பன் நாயக்கன் தெருவில் திடீரென சேதமடைந்த மின்கம்பம் ஒன்று சரிந்து கீழே விழுந்தது, அதனருகே இருந்த மேலும் மூன்று மின் கம்பங்களும் அடுத்தடுத்து சரிந்து கீழே சாய்ந்தது. இதன் காரணமாக உயர் அழுத்த மின் கம்பிகள் அறுந்து தீப்பொறி கிளம்பியதால், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் சேதமடைந்த மின்கம்பங்கள், உயர் அழுத்த மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

திடீரென அடுத்தடுத்து நான்கு மின்கம்பங்கள் சரிந்து கீழே சாய்ந்த சம்பவத்தில் பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details