திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகேவுள்ள ஏறாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனைச் சாவடியில், ஆரம்பாக்கம் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
தொடர்ந்து இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது ஆந்திர மாநிலம் நெல்லூரிலிருந்து வந்த ஆந்திரா அரசுப் பேருந்தை காவல் துறையினர் சோதனை செய்தனர்.
சோதனையில், கேட்பாரற்று கிடந்த 20 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர், பேருந்தில் சந்தேகத்திற்கிடமாக இருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த அஜித் ரோஷன் (24), அன்சார் (24), முகமது ஆசிப் (21), சில்சர்ஜர் (29), மர்ஜிக் (22) ஆகிய ஐந்து பேரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் விசாரணையில், 20 கிலோ கஞ்சாவை ஆந்திராவிலிருந்து கேரளாவிற்குக் கொண்டு செல்வதாக வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து, அவர்களை கைது செய்த காவல் துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இதையும் படிங்க: குன்னூர் அருகே கஞ்சா கொண்டு வந்த இருவர் கைது!