திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் தொடர்ந்து கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில், காவல் துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் , கும்மிடிப்பூண்டி விவேகானந்தா நகரில் உள்ள பெட்டி கடையில் பணம் கேட்டு மிரட்டுவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் ரிஸ்க் பாஸ்கர் (30), வினோத் (25) ஆகிய இருவரையம் கைது செய்தனர்.