திருவள்ளூர் மாவட்டம் இக்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலானூர் கிராமத்தில் செல்வம் என்பவர் தன் வீட்டிற்கு சமையல் செய்வதற்காக முள் செடி வெட்ட ஏரி பகுதிக்கு சென்றார். அப்போது அந்த ஊர் தலைவர் சங்கர், அவரது மகன்கள் இரண்டு பேரும் முள் செடியை வெட்டக்கூடாது என்று கூறி அவரை அடித்து வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் வீட்டிற்கு வந்து அவர்கள் குறித்து காவல் துறையிடம் புகார் கொடுக்க வேண்டுமென்று புறப்படும்போது திடீரென ஊர் தலைவர் அவருடைய இரண்டு பிள்ளைகள் மேலும் 40 பேருடன் வந்த அவர்கள் வீட்டுக்குள் வந்து சரமாரியாக அவரை தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்தார்.