தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அம்மையார்குப்பம் ஏரியில் நிரம்பிய நீர் - உழவர் மகிழ்ச்சி - ஏரியில் நிரம்பிய தண்ணீர்

திருத்தணி ஆர்கே பேட்டை அருகே 2ஆவது ஆண்டாக அம்மையார்குப்பம் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.

விவசாயில் மகிழ்ச்சி
விவசாயில் மகிழ்ச்சி

By

Published : Oct 18, 2021, 11:08 AM IST

திருவள்ளூர்: ஆர்.கே. பேட்டை ஒன்றியம் அம்மையர்குப்பத்தில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான ஏரியில் தொடர் மழை காரணமாக முழுமையாக நீர் நிரம்பியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏரி முழுக் கொள்ளளவை எட்டியதன் தொடர்ச்சியாக இரண்டாம் ஆண்டு ஏரி நிரம்பி கடவாசல் செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்தி செங்குட்டுவன் தலைமையில் கிராம பொதுமக்கள் ஒன்றுதிரண்டு ஏரி கடவாசல் செல்லும் பகுதியில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்தனர்.

இதில், சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். சந்திரன் பங்கேற்று ஏரியில் மலர்த்தூவி பூஜைகள் செய்து கங்கா தேவியை வழிபட்டனர். மேலும், கிடா வெட்டி ஊர் மக்களுக்கு கறி விருந்துவைத்துனர்.

இதையும் படிங்க:அணையிலிருந்து வெளியேறும் உபரி நீர் - தடுப்பணை கட்ட கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details