திருவள்ளூர்:கும்மிடிப்பூண்டி அருகே நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தம் நடத்திய ஒபிஎஸ், சசிகலா காலில் விழுந்தவர். ஓபிஎஸ் தொடங்கியுள்ளது தர்ம யுத்தம் 2.0. அது தர்ம யுத்தம் அல்ல கர்ம யுத்தம்.
திமுகவுடன் சேர்ந்து அதிமுக கட்சி அலுவலகத்தை அவர் தாக்கினார். திமுக ஒபிஎஸ்க்கு பின்புலமல்ல, பக்க பலமாக உள்ளது. சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. முதலமைச்சர் தொகுதியை யாரும் படம் பிடிக்க முடியாது. எதிர்கட்சிகளை மட்டுமல்ல, 4-ஆவது தூணையும் திமுக மிரட்டுகிறது.
திமுக ஆட்சிக்கு வெளிப்படை தன்மை இல்லை. மழை பெய்யும் போது சாலை அமைக்கிறது அரசு. பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் அரசு துரிதமாக செயல்பட வேண்டும். அம்மா மருந்தகத்தின் மூலம் திமுக அரசு எந்த பயனையும் செய்வதில்லை. ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது. அரசு மக்களின் உயிரை பற்றி பொருட்படுத்தாமல் உள்ளது.