மத்திய அரசின் பாதுகாப்புத் துறைக்கு சொந்தமாக நாடு முழுவதும் 41 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதனை தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதை கண்டித்து, சென்னை ஆவடியில் இயங்கும் கனரக வாகன தொழிற்சாலை முன்பு தொழிலார்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கலந்துகொண்ட 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், மத்திய அரசின் தனியார் மயமாக்கும் கொள்கையை கண்டித்து கோஷமிட்டனர்.
பாதுகாப்பு துறைக்கு சொந்தமான தொழிற்சாலையை தனியார்மயமாக்க கூடாது! இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,
ஆவடியில் ராணுவ உடை தொழிற்சாலை, எஞ்சின் தொழிற்சாலை உள்ளிட்ட ஆறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
திடீரென இந்த நிறுவனங்கள் தனியார் மயமானால் அனைத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
மேலும் நாட்டின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக அமைவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தனர்.