தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத்திய அரசுக்கு எதிராக போராடியவர்கள் கைது! - DYFI

திருவள்ளூர்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தடையை மீறி மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

DYFI Protest Against Petrol Price Hike In Thiruvallur
DYFI Protest Against Petrol Price Hike In Thiruvallur

By

Published : Jul 5, 2020, 4:38 PM IST

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் ஏழை நடுத்தர மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். ஆனால் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டிய மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுத்து அவர்களை மேலும் செல்வந்தர்களாக்கவும் தொழிலாளர் வர்க்கத்தை நசுக்கவும் மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கிறது என மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதையடுத்து, பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். ஊரடங்கல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 7500 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க:பொது முடக்க விதிமுறைகளை மீறி அமோகமாக நடைபெறும் சாராய விற்பனை!

ABOUT THE AUTHOR

...view details