திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அதிகாரியாக பணியாற்றி வருபவர் ஜெய பாஸ்கர். அவரது செல்ஃபோன் எண்ணிற்கு நேற்று முன்தினம் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர், தான் காவல்துறை அலுவலர் என்றும்; நீங்கள் லஞ்சம் வாங்குவதாக சென்னை லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் வந்துள்ளதாகவும்; அந்த புகார் குறித்து விசாரிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தாமல் இருக்க ரூ. 50,000 கொடுத்தால், அந்தப் புகார்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிடுவதாக கூறியுள்ளார்.
சந்தேகமடைந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திருவள்ளூர் நகர காவல்நிலையத்தில் இதுகுறித்து புகாரளித்தார். புகாரின் பேரில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன், ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைத்து போலியான காவலர்கள் பற்றிய விசாரணையை மேற்கொண்டனர்.
பின்னர் போக்குவரத்து அலுவலரிடம் பேசிய அந்த போலியான காவலர் மீண்டும் ஜெய பாஸ்கரிடம் தொடர்பு கொண்டபோது, முதல் கட்டமாக ரூ. 35 ஆயிரம் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதையடுத்து ஜெய பாஸ்கர் செல்ஃபோன் எண்ணிற்கு, ஜனார்த்தனன் என்ற பெயரில் வங்கி கணக்கு எண் ஒன்று அனுப்பப்பட்டது.